எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் முதல் பாடல் ‘கார்மேனி’ இன்று வெளியீடு
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் வாழ்க்கைப் பயணத்தை கலகலப்பாக சொல்லும் ‘கார்மேனி செல்வம்’ குடும்பத் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (செப்டம்பர் 24) மாலை 5.55 மணிக்கு வெளியானது. நாயகன் செல்வத்தின் மனதை பிரதிபலிக்கும் வகையில் இப்பாடல் உருவாகியுள்ளது.
உணர்ச்சிப்பூர்வமான ‘கார்மேனி’ பாடல் செல்வத்தின் வாழ்க்கையின் சாரத்தையும் அவரது ஆசைகளையும் உள்ளடக்கிய ஒரு நெகிழ்ச்சியான பாடலாகும். செல்வத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டுள்ள பாடல் வரிகள், ஒரு டாக்ஸி ஓட்டுநராக அவரது நேர்மையான போராட்டங்கள், அவரது மனைவி சாந்தி மற்றும் மகன் பாலுவுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதற்கான அவரது கனவுகள் மற்றும் “நேர்மை EMI-களுக்கு பணம் செலுத்தாது” என்ற அனுபவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துகிறது. அவரது வாழ்க்கையின் அன்றாட சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது.
“பேராசை பட்டா தன் இறைவன் தருவான்” என்ற வரி இந்தப் பாடலின் மையக் கருவோடு ஒன்றியுள்ளது. தனது கொள்கைகளைக் கைவிட்டு, செல்வத்தை மாற்றுப் பாதையில் செல்லத் தூண்டும் தார்மீக சங்கடத்தை இது படம்பிடிக்கிறது. ‘எப்போ வருவாயோ’ என்ற ஏக்கம் மிக்க வரி, குடும்பத்திற்காக தனது கணவர் எல்லாவற்றையும் விட்டுக்கொடுப்பதைப் பார்க்கும் ஒவ்வொரு மனைவியின் சொல்லப்படாத வலியைப் படம்பிடிக்கிறது.
படம் பற்றி: கார்மேனி செல்வம் என்பது ஒரு ஆழமான சமூகத் திரைப்படம் ஆகும். கடமைக்கும் ஆசைக்கும் இடையிலான இடைவெளியை, நேர்மை மற்றும் விரக்திக்கு இடையிலான இடைவெளியை இது ஆராய்கிறது. செல்வம் என்ற நேர்மையான கொள்கைமிக்க கார் ஓட்டுநரை பற்றிய இந்த படம், திடீர் குடும்ப அவசரநிலை அவரை எந்த எல்லைக்கு தள்ளுகிறது என்பதை திரையில் காட்டும். காதல் மற்றும் உயிர்வாழ்தலில் உண்மையான அர்த்தத்தை செல்வமும் அவரது மனைவையும் எவ்வாறு புரிந்து கொண்டனர் என்பதை இது விவரிக்கிறது.
சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமிபிரியா சந்திரமௌலியும் கௌதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பாராட்டுதல்களை பெற்றது.
இயக்குநர் ராம் சக்ரி கூறுகையில், “நேர்மையான, உண்மையான மற்றும் உலகளவில் தொடர்புபடுத்தக்கூடிய ஒரு கதையை ‘கார்மேனி செல்வம்’ படத்தின் மூலமாக சொல்வதே எங்கள் நோக்கம் ஆகும். சாதாரண மக்களின் ஆசைகள் மற்றும் போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையில் டீசரில் உள்ள ஒவ்வொரு ஃபிரேமும், ஒவ்வொரு வசனமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘கார்மேனி’ பாடல் படத்தின் ஆன்மாவாக அமைந்துள்ளது. பார்வையாளர்கள் இதை வரவேற்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.
பாத்வே புரொடக்ஷன்ஸ் பேனரில் அருண் ரங்கராஜூலு தயாரிப்பில் ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கும் ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசர் ஶ்ரீ சரவணன் ஆவார், யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இசையை மியூசிக் கிளவுட் ஸ்டூடியோ & டெக்னாலஜி எனும் நிறுவனம் அமைத்துள்ளது. ஜெகன் ஆர்.வி. மற்றும் தினேஷ் எஸ் படத்தொகுப்பை கையாண்டுள்ளனர். தயாரிப்பு வடிவமைப்பை ஷங்கர் கவனிக்க, மணி அமுதவன் பாடல்களை எழுத, ராகவ் ரமேஷ் ஆடியோகிரபியையும், ராகவ் ரமேஷ் மற்றும் ஹரி பிரசாத் எம்.ஏ ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர். நிர்வாக மேலாளர்: மணி தாமோதரன், தயாரிப்பு மேலாளர்: வி.ஆர். ராம்பரத்.
பாடல் விவரங்கள்:
* பாடலின் பெயர்: கார்மெனி
* பாடகர்கள்: குல்ஸ், ஸ்ரேயா ஸ்ரீரங்கா
* ராப் பாடல் வரிகள்: குல்ஸ்
* எப்போ வருவாயோ: மணி அமுதவானன்
* சிதார்: பூர்பயன் சாட்டர்ஜி
* இசையமைப்பாளர்: ராமானுஜன் எம்.கே
* இசை புரோகிராமிங்க்: ஜீவன் டி ஜாய்
* மியூசிக் அரேஞ்ச்மென்ட்ஸ்: ஜீவன் டி ஜாய், ஹிருதய் கோஸ்வாமி & ராமானுஜன் எம்.கே
* மிக்ஸ் & மாஸ்டரிங்: ஹிருதய் கோஸ்வாமி, எக்ஸ்-நாய்ஸ் ஸ்டுடியோ, கவுகாத்தி
* ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள்: 20டிபி சவுண்ட் ஸ்டுடியோஸ் & மியூசிக்லவுட்ஸ்டுடியோ & டெக்னாலஜி,
* ஒலி பொறியாளர்கள்: ஹரிஹரன், மணிகண்டன் என்
“கார்மெனி” பாடல் இன்று, செப்டம்பர் 24, 2025 அன்று மாலை 5:55 மணி முதல் ஸ்பாட்டிஃபை, ஆப்பிள் மியூசிக், யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் அமேசான் மியூசிக் உள்ளிட்ட அனைத்து முக்கிய இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கிடைக்கும்.
Spotify
https://open.spotify.com/track/095OrgkIpAm6Gjem3jNZLr?si=r24IiFYcRGOI_gXpjBbPtw&nd=1&dlsi=e4bfd849439e451b
Jio Saavan
https://www.jiosaavn.com/p/song/search/Carmeni-Selvam/Carmeni/AxkBRDFgfnY?referrer=utm_medium=whatsapp&utm_source=whatsapp
Youtube Music https://music.youtube.com/watch?v=qMc4ImWskQM&si=sZQ84FZFDE5NMoCI
Apple Music – https://music.apple.com/in/album/carmeni-selvam-single/1841244776
Gaana – https://gaana.com/song/carmeni
Follow Carmeni Selvam on Social Media:
Instagram: @pathwaycinematics
Facebook: @pathwaycinematics
Twitter: @pathwaycinemas