தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறது.

17
South Indian Film Writers' Association, paying a courtesy visit to Superstar Rajinikanth
South Indian Film Writers' Association, paying a courtesy visit to Superstar Rajinikanth

தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கிறது.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் – இயக்குனர் சேரன், பொதுச்செயலாளர் – பட்டுக்கோட்டை’ பிரபாகர், பொருளாளர் – R.சுந்தர்ராஜன், நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மரியாதை நிமிர்த்தமாக பெருமைமிகு மனிதரும் தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையுமான சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து வாழ்த்தும் ஆசியும் பெற்றோம்.. இன்றைய கதை ஆசிரியர்களின் நிலை பற்றி பேசி அதை எப்படி எல்லோருடனும் பேசி சுமூகமாக எல்லோருக்கும் நன்மை கிடைக்கும்படி கையாள எங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.. திரையுலகில் வள்ளி, பாபா உட்பட கதையாசிரியராகவும் அவர் பணியாற்றி இருப்பதால் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணையும்படி நாங்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்று சம்மதமும் தெரிவித்தார்.

In-article leaderboard

நேரம் ஒதுக்கி எங்களோடு உரையாடிய மாண்புமிகு மனிதருக்கு நன்றி கூறி விடைபெற்றோம்..

#SWAN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here