“சோழ தேசம்” கண்காட்சி அழைப்பிதழைப் பெற்றுக்கொண்டு வாழ்த்திய நடிகர் மற்றும் கலைஞர் சிவகுமார்!
வரலாற்றுச் சிறப்புமிக்க “சோழ தேசம்” இடைக்காலக் கண்காட்சி, வரும் செப்டம்பர் 11 முதல் அக்டோபர் 25, 2026 வரை சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியின் அதிகாரப்பூர்வ அழைப்பிதழை, மூத்த நடிகரும் சிறந்த ஓவியருமான திரு. சிவகுமார் அவர்களை நேரில் சந்தித்து வழங்கி, அவரது வாழ்த்துகளையும் ஆசியையும் பெற்றோம்.

அழைப்பிதழை மிகுந்த மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் பெற்றுக்கொண்ட திரு. சிவகுமார் அவர்கள், “இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியின் தொடக்க நாளில் முதல் ஆளாக நானே நேரில் வந்து கலந்து கொள்கிறேன்”* என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும், தனது சிறுவயது முதலே வரைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயங்கள் மற்றும் தொன்மையான இடங்களின் ஓவியங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். தான் வரைந்த ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ள அரிய வரலாற்றுச் சம்பவங்களையும், அவற்றை வரையத் தொடங்கியபோது தனக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்களையும் சுவையான நிகழ்வுகளாகப் பகிர்ந்து கொண்டார்.

வரலாற்றையும் கலையையும் ஒருங்கே நேசிக்கும் சிறந்த கலைஞரான திரு. சிவகுமார் அவர்களிடமிருந்து கிடைத்த இந்த வாழ்த்தும் ஊக்கமும், “சோழ தேசம்” கண்காட்சி குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தையும் பெருமையையும் அளித்துள்ளது.

இவண்,
மு. விஜயகுமார்
ஒருங்கிணைப்பாளர் – “சோழ தேசம்” கண்காட்சி
மு. ஹரி
இயக்குநர் – மு.அ. தமிழ் ஆய்வகம்
நிறுவனர் – “சோழ தேசம்”
மு. ஜீவானந்தன்
ஒருங்கிணைப்பாளர்
தொடர்புக்கு: +91 97910 31152
இணையதளம்: [www.choladesam.com]










