இசைஞானி இளையராஜா இசையமைப்பில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’, அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ வெற்றிப் படங்களைத் தயாரித்த, அபராஜீத் பிலிம்ஸ் கணேஷ் ரகு தயாரிப்பில், அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கும் புதிய படம்
அமெரிக்காவில் வசிக்கும் கணேஷ் ரகு, தனது அபராஜீத் பிலிம்ஸ் சார்பாக மிகுந்த பொருட்செலவில் பாலா இயக்கத்தில் சூர்யா, லைலா நடித்த ‘நந்தா’ படத்தை தயாரித்து மிக பிரம்மாண்டமான வெற்றியின் மூலம் தமிழ் திரையுலகில் தடம் பதித்தார். தொடர்ந்து, பாலாவின் உதவி இயக்குநர் அமீரை சூர்யா, திரிஷா நடித்த ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் செய்து, அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதைத் தொடர்ந்து, அமீரின் உதவி இயக்குநர் இராம்.நா இயக்கத்தில், புதிய படம் ஒன்றை மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் அபராஜீத் பிலிம்ஸ் பேனரில் கணேஷ் ரகு தற்போது தயாரிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் கோவையில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் தொடக்க விழா நிகழ்வில், சேரன் clap – in சொல்ல, சசிக்குமார் camera on செய்ய, அமீர் clap அடித்து, பாலா action சொல்ல, முதல் காட்சியை இயக்குநர் பாலா படமாக்கினார்
இயக்குனர் SA சந்திரசேகர், நடிகர் சிவக்குமார், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, திருமதி் பூர்ணிமா பாக்யராஜ மற்றும் இயக்குனர்
கரு பழனியப்பன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நந்தா-மௌனம் பேசியதே படங்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்த நிலையில் முதன்முறையாக இசைஞானி’இளையராஜா
நெகிழ்ச்சியான கதைக்களமும், ஊக்கமளிக்கும் திரைக்கதையும் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு, இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு, வாஞ்சி முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, பரதன் வசனம் எழுத, பாலுமகேந்திரா கலை இயக்கத்தில், பூபதி வேதகிரி படத்தைத் தொகுக்க, மீரா ஆடை வடிவமைக்க, பாலு ஸ்டில்ஸ் எடுக்க, பழநி அமாவாசை உடைகள் வடிவமைக்க, ஒலிக்கலவையை ஹரிஷ் கவனிக்க, மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்க, கோபி பிரசன்னாவின் விளம்பர வடிவமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பை விஜயகுமார் R S, காசி வர்மன் கவனிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அபராஜீத் பிலிம்ஸ் தமிழ் சினிமாவில் திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களை அடையாளப்படுத்தி ஊக்குவித்து வரும் தனது திரைப் பயணத்தை இந்த திரைப்படத்தின் மூலம் தொடர்கிறது.









