கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று”

74
Kannadasanin “Thalattum Poongatru” Book Launch
Kannadasanin “Thalattum Poongatru” Book Launch

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 13.04.2026 (மாலை), கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் திரு.லஷ்மிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டு முதல் பிரதியை திரு.செல்வரத்னம் (இலங்கை) பெற்றுக்கொண்டார்.

வலமிருந்து இடமாக : திரு.ஆர். பத்மநாபன், திரு.பால சீனிவாசன், திரு.பி.வி.வைத்தியலிங்கம், திரு.ரவி தமிழ்வாணன், திரு.செல்வரத்னம், கவிஞர் காவிரிமைந்தன், திரு.லஷ்மிநாதன், திரு.நிகில் முருகன், திருமதி.வெண்ணிலா காமராஜ், திருமதி. கல்யாணி ஸ்ரீதர், திருமதி.ஸ்ரீதேவி துரை அரசு, திரு.அந்தமான் கிருஷ்ணமூர்த்தி

In-article leaderboard

கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில் நிகழ்ச்சியில் கவிஞர் லஷ்மிநாதன் அவர்களின் தொடர் தமிழ்ப் பணிகளையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்தரும் பேராதரவும் ஊக்கமும் கருதி “சுடர்கவி” எனும் விருது வழங்கப்பட்டது.

கவிஞர், எழுத்தாளர் திரு. செல்வரத்தினம் (எ) செல்வா (இலங்கை) அவர்களுக்கு தமிழ், கவிதை மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்காக பாராட்டி “வாழ்வியல் வழிகாட்டி” எனும் விருது வழங்கப்பட்டது.

தென்னிந்திய திரைத் தொடர்புத் துறையில் தனித்துவமாய்த் திகழும் திரு. நிகில் முருகன் அவர்களுக்கு மக்கள் தொடர்பு மாமணி எனும் விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here